Tirupati: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தன.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ளது, திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து, கொரோனா குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தன. தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.