Home உலகம் விண்டோஸ் 11 இந்தியாவிலும் அறிமுகம் – நீங்கள் அறிய வேண்டியது இதுதான்

விண்டோஸ் 11 இந்தியாவிலும் அறிமுகம் – நீங்கள் அறிய வேண்டியது இதுதான்

53
0

மைக்ரோசாப்ட் கணினி இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான விண்டோஸ் 11 இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 பயனர்கள் இந்த புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக தரவிறக்கி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.இது குறித்து விண்டோஸ் மென்பொருள் தலைமை தயாரிப்பு அதிகாரி பனோஸ் பனாய் பிபிசியிடம் பேசுகையில், “விண்டோஸ் 11 சமீபத்திய பதிப்பு பயனருக்கு “புதிய மற்றும் எளிமையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது,”
என்று கூறினார்.

இந்த புதிய இயங்கு முறை, தற்போதைய பயன்பாட்டு முறையில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டிருக்காது என்றும் அவர் உறுதியளித்தார். சமீபத்திய இயங்குதளத்தை பயன்படுத்துபவர் தொழில்நுட்ப ரீதியாக அதிக ஆற்றலைக் கொண்டிருக்காவிட்டாலும், அவரால் இதை இயக்கும் வகையில் இதன் வசதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என்றார் பனோஸ் பனாய்.

“நான் என் தந்தையின் ஃபிரேமை பயன்படுத்துகிறேன் – அவருக்கு வயது 89,” என்று கூறிய பனோஸ், “இயங்குதள மேம்பாட்டுக்கான பொத்தானை அழுத்தும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த உணர்வு உங்களுக்குத் தெரியாது,” என்று கூறி நெகிழ்ச்சியடைந்தார். “காரணம், இனி இது எனது அப்பாவுக்கும் எளிமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றார் பனோஸ்.

விண்டோஸ் இன்சைடர் சோதனை ஓட்டம் மூலம் இந்த இயங்குதளம் விரிவாக பரிசோதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் ஆரம்பகால பிரச்னைகள் எதுவும் இதில் இருக்க வாய்ப்பில்லை என்று நம்புவதாகவும் பனோஸ் கூறினார்.