பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஒரு பயனர் தேர்வுசெய்யும் எந்தவொரு Fixed-line கனெக்ஷனுக்கான இன்ஸ்ட்டாலேஷன் கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகள், டிஎஸ்எல் பிராட்பேண்ட் இணைப்புகள் மற்றும் லேண்ட்லைன் சேவை போன்ற பல சேவைகளை டெல்கோ வழங்குகிறது. இப்படியான எந்தவொரு சேவைக்குமான புதிய இணைப்புக்கான நிறுவல் கட்டணங்கள் ஏப்ரல் 30, 2021 வரை தள்ளுபடி செய்யப்படுகின்றன.
பிஎஸ்என்எல் 2021 ஏப்ரல் 8 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கை மூலம் இந்த தகவலை அறிவித்துள்ளது. இந்த சலுகை எந்தவொரு குறிப்பிட்ட வட்டத்திற்கும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதால் இது இந்தியா முழுவதும் அணுக கிடைக்கும். டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்ற அனைத்து மாநிலங்களையும் வட்டத்தையும் இத சலுகை பற்றி வலைத்தளங்களில் அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதால், மேற்கண்ட சலுகை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆக இப்போதே தொடங்கி ஏப்ரல் 30, 2021 வரை, பிராட்பேண்ட் அல்லது லேண்ட்லைன் இணைப்பைத் தேடும் பிஎஸ்என்எல் பயனர்கள் எந்த நிறுவல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியதில்லை. வழக்கமாக ஒரு புதிய பிஎஸ்என்எல் இணைப்பை நிறுவுவதற்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு செலுத்த வேண்டும்? பிஎஸ்என்எல்-இன் இந்த புதிய சலுகையுடன் அதன் பயனர்கள் சரியாக எவ்வளவு பணத்தை சேமிக்கிறார்கள் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அது கணிசமான தொகையே ஆகும்.
பிராட்பேண்ட் ஒன்லி இணைப்புகளுக்கு, பிஎஸ்என்எல் பயனர்கள் நிறுவல் கட்டணமாக ரூ .250 செலுத்த வேண்டும். ஆனால் பாரத் ஃபைபர் இணைப்புகளுக்கு, பயனர்கள் நிறுவல் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள வாய்ஸ் காலிங் சேவையுடன் பிராட்பேண்ட் இணைப்பை பெற ஒருவர் ரூ.250 என்கிற நிறுவல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.