Site icon Thirupress

மதுரை-சிங்கப்பூர்..இனி ஈசியா பறக்கலாம்; அசத்தல் அறிவிப்பு!

மதுரை-சிங்கப்பூர்..இனி ஈசியா பறக்கலாம்; அசத்தல் அறிவிப்பு!

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் இனி ஈசியா பறக்கலாம் என்ற சூழல் வந்துள்ளதால் பயணிகள் குஷியில் உள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தினந்தோறும் உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு வெளிநாட்டு சேவைகளை வழங்கி வருகிறது.

சமீபகாலமாக மதுரை விமான நிலையத்திற்கு காலையில் வரும் பெங்களூர் விமானம், அதனைத் தொடர்ந்து வருகை தரும் மும்பை, டெல்லி மற்றும் மாலையில் செயல்படும் திருப்பதிக்கு செல்லும் விமானம் ஆகியவை போதிய பயணிகளின் வருகை குறைவினால் ரத்து செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையுடன் 9 முதல் 10 விமானங்கள் இயக்கப்படுகிறது.

தற்போது புதிதாக மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு வருகின்ற மார்ச் 29ம் தேதி முதல் அக்டோபர் 29ம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் பயண சேவை தொடங்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு தினமும் மாலை 6.40 மணிக்கு வரும். அதேபோல் மதுரையில் இருந்து தினமும் இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூருக்கு காலை 4.30 மணிக்கு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version